

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியில் தீர்மானம் எடுக்ப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழுவில் இவ்வாறு தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்துச் சங்குச் சினத்தில் வாக்களிப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடையே இடம் பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இட்ம்பெற்ற நீண்ட விவாதத்தின் பின் இத் தீர்மானம் ஏக மனதாக எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசு கட்சி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை முடிவினை அறிவிக்காதிருந்த நிலையில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தரப்பினர் வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் அவற்றை பரிசீலித்து முடிவினை அறிவிக்கலாம் என தெரிவித்து வந்துள்ளனர்.
இதேவேளை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்.சிறீதரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழப் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவினையும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட இலங்கைத் தமிழரசு கட்சி மட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை தமிழ்ப் பொது வேட்பாளருக்கான தேவையையும்இ அனைத்துத் தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் அழுத்தந்திருத்தமாக வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க தமிழ்ப் பொது வேட்பாளர் விடையத்தில் தென்னிலங்கையில் இருந்து கிடைக்கப்பெறும் மூன்றாம் தரப்பு தகவல்கள், தென் இலங்கையின் பிரதான சிங்கள வேட்பாளர்கள் நால்வரிலும் அதிருப்தி கொண்டிருக்கும் முற்போக்கு மற்றும் சிங்கள மிதவாதிகள், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமது வாக்குகளை செலுத்துவது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக சில மிதவாதப்போக்குள்ள தென்னிலங்கை அமைப்புகளில் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
Leave a Reply