Advertisement

mதன் அடிப்படையில் இலங்கை தமிழசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையினராகிய நாங்கள் கட்சியினுடைய இணக்கவிதிகளுக்கு உட்பட்டு மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும் சிவில் சமூகம் மற்றும் மத குருமார்களுடனும் ஏனைய பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2024 8 முப்பதாம் திகதி கிளிநொச்சி மாவட்ட கிளையாக ஒன்றிணைந்து ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை மத்திய செயற்குழுவிற்கு தயவுடன் முன்னளிப்பு செய்கின்றோம்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து நிகழ்கால இலங்கையில் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தமிழ் மக்களுடைய இனத் தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தின் தேவை என்று நம்புகின்றோம்.
போருக்கு பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ் மக்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள், அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது, எனினும் அதுவே உண்மையானதும் ஆகும்
போரின் பின்னராக தோல்வி அடைந்த மன நிலையில் விடப்பட்ட தமிழ் சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாக கொண்டிருக்கிறது. எனினும் உள்நாட்டுக்குள்ளேயும் சர்வதேச சமூகத்தோடும் இணைந்து எமது ராஜதந்திர புத்தி பூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ அவர்களது நம்பிக்கைகளை கட்டி எழுப்பவோ இயலாது இருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இத்தேர்தல் எங்களுக்கு தந்திருக்கிறது
கூர் உணர்வு மிக்க அரசியல் திறன் அணுகுமுறை, மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையை பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலை தளர்ந்து போய் உள்ள சூழல் குறித்து தமிழ் தேசிய ஆர்வளர்களிடமும் அறிவு ஜீவிகளிடமும் சாதாரண பொது மக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகமாக வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

தமிழ் வாக்காளர்களிடையேயும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாத பிரதிவாதங்களை ஆழமாகவும் விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்து இருக்கிறது.

முழுமையான அறிக்கையின் காணொளி