Advertisement

கிளிநொச்சியில் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதியில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் நிதி மற்றும் பிரதேச சபைநிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தினூடாக 65.30 மில்லியன் ரூபா செலவில் பளை நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி திறப்பு விழா நேற்று முன் தினம் (01) நடைபெற்றது.

குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர் த.தர்சினி தலைமையில், பளை பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குத்தகைதாரர்களுக்கு திறப்புக்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன், கிளிநொச்சி பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.சத்தியராகவன், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அலுவலர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *