Advertisement

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் களமிறக்கத்திற்கான விளக்கவுரைக் கூட்டம்

முல்லை தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் கடந்த திங்கட்கிழமை தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றிய விளக்கவுரைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புது குடியிருப்பு தேவி புரப்பகுதியைச் சேர்ந்த 47 செயற்பாட்டாளர்கள் பங்கு கொண்டிருந்தார்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரும், தன்னார்வத் தொண்டனாக தமிழ் பொதுக்கட்டமைப்பின் செயற்பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு, தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவைத் திரட்டுவதற்குத் தீவிரமாகச் செயற்பட்டு வருபவருமான, திரு கரிஸ் அவர்களின் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் போது தேவிபுரத்துச் செயற்பாட்டாளர்கள் தமக்கிருந்த பலவிதமான சந்தேகங்களை கேட்டு அவற்றிற்கான பதிலையும் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதனால் தமிழ்த் தேசிய நலன் சார்ந்து தமிழரின் சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தாயகம், தேசியம், தன்னாட்சிக் கோட்பாட்டின் கீழ் தமிழ் மக்களுக்களின் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்று எவ்வாறு எட்டப்படலாம் என்ற விடயங்களும் திரு கரிஸ் அவர்களினால் தேவிபுர செயற்பாட்டாளர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் திரு கரிஸ் அவர்கள் ஐயந்திரிபறத் தீர்த்து வைத்தார் என்று கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கலந்து கொண்ட செயற்பாட்டாளர்களிடம் அவரவர் சுற்றுச்சூழலில் தமிழ்ப் பொது வேட்பாளர் அரிய நேத்திரனுக்கான ஆதரவை திரட்டுமாறும் அப்பகுதி மக்களை தவறாது அவருக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்ளுமாறும் கூட்டத்தை ஒழுங்கு செய்த தன்னார்வத்தொண்டரான கரிஸ் கேட்டுக் கொண்டிருந்தார்
தமது சந்தேகங்கள் அனைத்தும் உரிய முறையில் தீர்த்து வைக்கப்பட்டதன் பின்பு மிகுந்த உற்சாகத்துடன் அச்செயற்பாத்தாளர்கள் கலைந்து செல்ல கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *